பங்குச்சந்தையின் பாரிய வீழ்ச்சி

0
290 views

கண்டி வன்முறை காரணமாக இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதில் பெரிய பாதிப்பு கொழும்பு பங்குச்சந்தைக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொழும்பு பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு அதிக விருப்பம் தெரிவிப்பதில்லை என பங்கு சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கண்டி மற்றும் அம்பாறை பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டவுடன் கொழும்பு பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் வைப்புகளை மீளவும் பெற்று கொண்டுள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.

அத்துடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் நிறைவு கொழும்பு பங்க சந்தையில் சற்று பின்னடைவை சந்திக்க முடிந்துள்ளது. அதற்கமைய தங்கள் பங்கு சந்தை தரவில் 3.46 வீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அது நூற்றுக்கு 0.05ம% வீத வீழ்ச்சியாகும்.

கடந்த வாரத்தில் நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளினால் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையும் குறைவடைந்தது. அதேபோன்று வர்த்தக நிறுவனங்கள் பல தாக்கப்பட்டமையினால் அதுவும் பொருளாதாரத்தை பாதித்திருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here