ஜநாவில் காப்பாற்றியமைக்கு ஆணையாளர் பதவி..!

0
497 views

இலங்கையின் காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகத்திற்கான ஆணையாளர்களாக ஜநாவில் இலங்கை அரசை காப்பாற்றிவரும் தரகர்களையும் இலங்கை அரசாங்கம் நியமித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஆணையாளர்களாக மேஜர் ஜெனரல் மொகன்டி பீரிஸ், ஜெயதீபா புண்ணியமூர்த்தி,கலாநிதி சிரியானி நிமல்கா பெர்ணான்டோ, மிராக் ரகீம், சோமசிறி கே லியனகே, கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோரை இலங்கை அரசாங்கம் நியமித்துள்ளது.

2016 ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல்போனவர்கள் அலுவலக சட்டத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட அலுவலகம் இனி செயற்படத்தொடங்கும் என அரசாங்கம் தெரிவித்திருந்தது.

ஆணையாளர்களை இலங்கையின் அரசமைப்பு பேரவை வெளிப்படையான முறையிலும் தகுதியை அடிப்படையாக கொண்டும் தெரிவு செய்துள்ளது எனவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது.
எனினும் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஜநாவில் இலங்கை அரசை காப்பாற்றுவதில் முனைப்பாக ஈடுபட்டவர்களென்ற வகையில் பரிசாக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் ஜநாவில் இலங்கையின் முகவராக பணியாற்றும் நிமல்கா பெர்ணான்டோஇமற்றும் அவரது சிபார்சில் கணவரை பறிகொடுத்து காணாமல் போனோருடன் இணைந்து செயற்பட்ட ஜெயதீபா புண்ணியமூர்த்தி , மிராக் ரகீம், சோமசிறி கே லியனகே போன்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் மனித உரிமைவாதிகளாக தம்மை காட்டிக்கொண்ட நிமல்கா போன்றோர் தற்போது இலங்கை அரசை ஜநாவில் காப்பாற்ற பாடுபடுபவர்களாக உள்ளனர்.

நல்லாட்சிக்கான காலநீடிப்பை பெற்று வழங்குவதற்காக ஜெனீவாவில் நிரந்தரமாக தரித்து நிற்கும் இவர்களது ஆலோசனையின் பேரிலேயே மனித உரிமை அமர்வு நடைபெறும் போது காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே மஹிந்த ஆதரவு தரப்புக்கள் நிமல்காவை காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர் பதவியிலிருந்து நீக்க கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here