சிரியாவில் இடம்பெற்று வரும் படுகொலைகளைக் கண்டித்து தொண்டைமனாறு பகுதியிலுள்ள பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நேற்று மேற்கொண்டன.
சிரியாவில் இடம்பெற்று வரும் கொடிய யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் கொன்று குவிக்கப்படுதைக் கண்டித்தே இந்த கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி இடம் பெற்றது. நேற்றுக்காலை 9மணிக்கு தொண்டைமனாறு சந்தியில் இருந்து ஆரம்பமான பேரணி வல்வெட்டித்துறை ஊடாக பருத்தித்துறை பிதேசசெயலகத்தில்நிறைவடைந்தது. இப்பேரணியில் அப்பகுதியிலுள்ள கடற்றொழிலாளர் சங்கங்கள் சனசமூக நிலையங்கள் உட்பட பல்வேறு பொது அமைப்புக்களைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.