வலய மட்ட பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தில் இவ்வருடமும் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கியது உடுப்பிட்டி மகளீர் கல்லூரி.
வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டி நேற்று வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் இடம்பெற்றது. இவ்விறுதியாட்டத்தில் உடுப்பிட்டி மகளீர் கல்லூரியும் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர் தரப் பாடசாலை அணியும் பலப்பரீட்சை நடத்தின.மூன்று செற்களைக் கொண்ட ஆட்டத்தில் 21:17 21:15என புள்ளிகளைப் பெற்று 2:0 என்ற நேர்செற் கணக்கில் வென்று சம்பியனாகியது உடுப்பிட்டி மகளீர் கல்லூரி அணி .
இதில் மூன்றாமிடத்ததை தனதாக்கியது தொண்டைமனாறுவீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்.