வடமராட்சி வலய மட்ட ஆண்களுக்கான கடற்கரை கரப்பந்தில் சம்பியனாகியது தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்
வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டி நேற்றுவல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் இடம்பெற்றது.இவ்விறுதியாட்டத்தில் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலமும் வல்வை சிதம்பராக் கல்லூரியும் மோதின.மூன்று செற்களைக் கொண்ட ஆட்டத்தில் 21:15 21:12 என்புள்ளிகளைப் பெற்று 2:0 என்ற நேர்செற் கணக்கில் வென்று சம்பியனாகியது தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்.
இரண்டாமிடத்தை சிதம்பராக் கல்லூரியும் மூன்றாமிடத்தை கம்பர்மலை அ.த.க. பாடசாலையும் பெற்றுக்கொண்டன.