பருத்தித்துறை பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான பெண்களுக்கான பூப்பந்தில் சம்பினாகியது பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான பூப்பந்தாட்டத்தின் இறுதியாட்டம் நேற்று நெல்லியடி மத்திய கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நேற்று இடம் பெற்றது. இவ்விறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக்கழகம் மோதியது.
இரண்டு ஒற்றையர் ஆட்டத்தையும் ஒரு இரட்டையர் ஆட்டத்தையும் கொண்ட இப்போட்டியில் 2:0 என்ற நேர் செற்றில் வெற்றி பெற்று சம்பியனாகியது பருத்தித்துறை ஐக்கிய மகளீர் அணி. 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டது வல்வை விளையாட்டுக்கழகம்.