வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டத்தில் 18 வயதுப் பிரிவு ஆண்கள் கரப்பந்தாட்டத்தில் மீண்டும் சம்பியனாகியது தொண்டைமனாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலய அணி.
இப்போட்டியின் இறுதியாட்டம் நேற்று நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.இவ்விறுதியாட்டத்தில் தொண்டைமனாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலயமும் உடுப்பிட்டி அ. மி கல்லூரியும் மோதின.
மூன்று செற்களைக் கொண்ட இவ்வாட்டத்தில் முதல் செற்றை உடுப்பிட்டி அ மி கல்லூரி 27:25என கைப்பற்ற அடுத்த இரு செற்களையும் 25:12என்ற புள்ளிகளைப் பெற்று 2:1 என்ற செற் கணக்கில் வென்று சம்பியனாகியது தொண்டைனாறு வீ ம. வி அணி.
வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டத்தில் 16வயதுப் பிரிவு ஆண்கள் கரப்பந்தாட்டத்தில் மீண்டும சம்பியனாகியது தொண்டைமனாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலய அணி.
இப்போட்டியின் இறுதியாட்டம் நேற்று நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.இவ்வவிறுதியாட்டத்தில் தொண்டைமனாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலயமும் வல்வெட்டி இந்து தமிழ் வித்தியாயலயமும் மோதின.
மூன்று செற்களைக் கொண் இவ்வாட்டத்தில் 25:22 25:12என்ற புள்ளிகளைப் பெற்று 2:0 என்ற செற் கணக்கில் வென்று சம்பியனாகியது தொண்டைனாறு வீ ம. வி அணி