மரண அறிவித்தல்
திரு.பிறேம்குமார் கிருஸ்ணபிள்ளை
மலர்வு 16.12.1946 உலர்வு 31.01.2015
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு.பிறேம்குமார் கிருஸ்ணபிள்ளை அவர்கள் 31.01.2015 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற கிருஸ்ணபிள்ளை சீதாலட்சுமியின் அன்பு மகனும், காலம் சென்ற சந்திராதேவியின் அன்புக் கணவரும், புருசோத்தமன் (பிரசன்னா)வின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவர் காலம் சென்ற கமலாதேவி, இந்திராதேவி, கிருஸ்ணகுமார் மற்றும் சுதர்சனராஜா (கொழும்பு) சாரதாதேவி (இந்தியா) நிர்மலாதேவி (நோர்வே) ஜெயகிருஸ்ணராஜா (கொழும்பு) ஆகியோரின் அனபுச் சகோதரரும், (நியூசிலண்ட்) சண்முகநாதன் (லண்டன்) நவநீதன் (லண்டன்) காலம் சென்ற முத்தையா, சுந்தரலிங்கம் (இந்தியா) அருந்ததிராணி (கொழும்பு) கௌரி, கலைராஜன் (நோர்வே) வசந்தி (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 02.02.2015 காலை 11.00 மணிக்கு நடைபெற்று மதியம் 2.00 மணியளவில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகனக் கிரியைகள் நடைபெறும் இடம்
FERNANDO மலர்சாலை
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புருசோத்தமன் (கொழும்பு)- 0094774881729
நிர்மலாதேவி (நோர்வே)- 004721393678
சாரதாதேவி (திருச்சி)- 00919944204618
ஜெயகிருஸ்ணராஜா (கொழும்பு)-0094714790054