பட்டம் ஏற்றிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்

0
702 views

யாழ். சாவகச்சேரி கல்வயல் பகுதியில் பட்டம் ஏற்றிக்கொண்டிருந்த 16 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த ஜெயகுமாரன் தீசன் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பட்டம் ஏற்றிக்கொண்டு பின்பக்கமாக ஒட்டிய போதே சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.உயிரிழந்த சிறுவனின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here