யாழ்ப்பாணம் மாநகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைப்பதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.