சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தற்போதைய சொத்து மதிப்பு….

0
595 views

தமிழக அரசியலில், ஏன் இந்திய அரசியலில் இன்று ஹாட் ஸ்டாராக இருப்பது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் தான். ரஜினியின் அரசியல் அறிவிப்புப் பின் அரசியல் தலைவர்களின் இவரது வருகை குறித்துப் பெரிய அளவில் பேசி வருகின்றனர். மேலும் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் இவரது அறிவிப்பைக் கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் அரசியல் வருகையைப் பிஜேபி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அதிகப்படியான ஆதரவு அளித்து வரும் நிலையில், ரஜினி இக்கட்சியுடன் கூட்டணி வைப்பார் எனக் கூறப்பட்டாலும், தான் தனிக்கட்சி துவங்குவதாகவே ரஜினி அறிவித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இவரது சொத்து மதிப்பு கவனிக்க வேண்டியதாக உள்ளது.

மொத்த சொத்து மதிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தற்போதைய சொத்து மதிப்பு 360 கோடி ரூபாய் என்று ஃபின்ஆப் வெளியிட்டுள்ளது. இதுவே ரஜினியின் பிரபலத்தினை வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் இவரது சொத்து மதிப்பு என்பது மிகவும் அதிகமாக உயரும். ரஜினிகாந்த்தின் வருவாயில் குறிப்பிட்ட அளவிலான பங்குகள் தொண்டு நிறுவனங்களுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது, அதே நேரம் தான் நடித்த படம் சரியாக வசூலிக்கவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு குறிப்பிட்ட அளவிலான பணத்தினைத் திரும்பவும் அளிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.

சொத்து ஆதாரம்

ரஜினியின் சொத்து மதிப்பு என்பது திரைப்படத்தில் இருந்து வரும் ஊதியம், வீடு மற்றும் தனிப்பட்ட முதலீடுகள் போன்றவற்றினை வைத்துக் கணக்கிடப்பட்டதாக ஃபின்ஆப் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்றாலும் இந்தியா மட்டும் இல்லாமல் உலகளவில் பிரபலமான நடிகராக உள்ளார்

மொத்த சொத்து மதிப்பு

சராசரியாகத் திரைப்படத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் 55 கோடி எனவும், முதலீடுகள் மூலமாக 110 கோடி ரூபாய், ஆடம்பர கார்கள் 3 க்கும் சேர்ந்து 2.5 கோடி ரூபாய், ஆண்டுக்கு வருமான வரி 13 கோடி என இவரது சொத்துக்கள் மதிப்பிடப்பட்டுள்ளது.

வீடு

சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டை 2002-ம் ஆண்டு ரஜினி வாங்கியுள்ளார். இதன் தற்போதிய மதிப்பு என்பது 35 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

கார்கள்

பிற நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் போன்று 10க்கும் மேற்பட்ட ஆடம்பர கார்கள் ரஜினியிடம் இல்லை. ரேன்ஞ் ரோவர், பெண்ட்லி, மற்றும் டொயோட்டா இன்னோவா என்றும் மொத்தம் மூன்று ஆடம்பர கார்கள் மட்டுமே இவர் பயன்படுத்தி வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகள் வருவாய்

ஆண்டு            வருவாய்

2016     ரூ. 65 கோடி

2015      ரூ. 5.5 கோடி

2014      ரூ. 35 கோடி

2013      ரூ. 60 கோடி

2012      ரூ. 49 கோடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here