தாயகத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மற்றும் போரினால் தந்தையை இழந்த அல்லது பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டிற்காக நிழல்கள் தொண்டு அமைப்பு – U.K , செக்டா தொண்டு நிறுவனத்திற்கு 25,000.00 (ரூபா இருபத்திஐயாயிரம் ரூபா ) நிதியினை உதவியது. இவ் உதவித்திட்டத்தின் மூலம் 33 பயனாளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் தனித்தனியே வழங்கப்பட்டதுடன் மேலும் சின்னஞ்சிறு கல்விமான்கள் பாலர் பாடசாலையின் 25 மாணவர்களுக்கு பொதுவான பாவனைக்காகவும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.