வல்வை உதயசூரியன் உல்லாசக்கடற் கரை வானில் பறந்தன நூற்றுக்கணக்கான விசித்திரப்பட்டங்கள். இப்பட்டங்களை பார்ப்பதற்காக வருகைதந்த 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களால் நிறைந்திருந்தது வல்வைஉதயசூரியன் உல்லாசக்கடற் கரை
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நடத்திய மாபெரும்விசித்திர பட்டப்போட்டியும் கல்வியில் சாதனை படைத்த சாதனையாளர் கௌரவிப்பும் உதயசூரியன்கடற்கரையில் நேற்று மாலை இடம்பெற்றது.
நிலையத்தலைவர் சு.கெங்காரூபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீராவும் ,சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்..
சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் எயார் ஆட்டோ , இரட்டை வால்திமிங்கிலம், இராட்டினம் ,குத்துச்சண்டை வீரர்கள் ,ஆமை ,விசித்திர ஹெலிகொப்டர் ,பறக்கும் தட்டு, பறக்கும்பொம்மலாட்டம் , மணிக்கூடு ,குப்பை வாளி ,வீதி செப்பனிடம் இயந்திரம் உட்பட நூற்றுக்கு மேற்பட்டபட்டங்கள் வானில் பறந்தன
பட்டப்போட்டியில் 30 பட்டங்களுக்கு இலட்சம் ரூபாவிற்கு மேல் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டன
பரிசு பெற்ற பட்டங்களின் விபரங்கள்
1 ஆம் இடத்தினை பறக்கும் மேடையில் பொம்மலாட்டம் பெற்றுள்ளது. இப் பட்டத்தினை ஏற்றிய ம.பிரசாந்தின் என்பவருக்கு 15 ஆயிரம் ரூபாவும் 1 பவுண் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது. இப் பட்டம் கட்டும் கலைஞன் மூன்றாவது தடவையாகவும் முதல் பரிசிலினை பெறுகின்றார்
2 ஆம் இடத்தினை அன்னப்படகு பெற்றுள்ளது இப்பட்டத்தினை ஏற்றிய ம.ஆரோக்கி என்பவருக்கு அரைப்பவுண் தங்கக் காசும் 10 ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கப்பட்டது.
3 ஆம் இடத்தினை உருமாறும் ரான்ஸ்போமர் பெற்றுள்ளது. இப்பட்டத்தினை ஏற்றிய வெ.ராஜேந்திரன்என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாவும், சைக்கிள் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.
4.எயர் ஆட்டோ ம.ஹசன்
5.இந்திர விமானம் சாம்.ஜெயவேல்
6.காட்சிலாவும் காலகேயனும் ஜெகதீஸ் நிகிலன்
7.இரட்டய் வால் கொம்பன் சுறா ம.லக்ஸ்மன்
8.கை கடிகாரம் தீபன் ராஜ்
9.டிராகன் பகீரதன் மதுராஜ்
10.சாட்டிலயட் ச.ஶ்ரீதர்
11.எலியன் கப்பல் குட்டி சகோதரர்கள்
12.மிக்செவன் ஆ.ஆனந்தருபன்
13.குதிரை வண்டி S.சாய்குமார்
14.கெலி ம.அபிஷேக்
15.தல்லு வண்டி சி.தனுசன்
16.நன்கூரம் S.கனேஷ் குமார்
17.பட்டா வாகனம் தன்கவேல் ஜெயகார்த்தி
18.குருவி திருக்கை ந.அபிசன்
19.ஆமை பகீரதன் மதியழகன்
20.3D முக்கோணம் முரளி பரிதியன்
21.பறக்கும் மீன் கு.திருக்குமரன்
22.குப்பை வாலிகள் தந்த்கவேல் ஜெயகாந்த்
23.பூக்கூட்டம் நித்தியாந்தசாமி பாலகிருஷ்ணன்
24.ரொலிகள் த.இந்துஜன்
25.உளவுத்துரை விமானம் பாலேந்திரன் நந்தரூபன்
26.விமான ஆட்டோ ஶ்ரீ.சுஜிகன்
27.அறுகோணம் ஆதவ்ன் அமிழ்தினி
28.எலியன் விமானம் முரளி பரிதியன்
29.வண்ண்த்துப்பூச்சி ஶ்ரீ.செந்துரன்
30.வேல் ஶ்ரீ.சுரேன்