ஆதிகாலத்தில் ஈழதீபத்தில் விஜயன் வருகைக்கு முன்னரே ஈழதீபத்தின் உச்சிநகரில் வாழ்ந்த மக்கள் அன்னிய படைகளை வரவிடாமல் கரைஒதுங்காமல் கரைகாத்தவர்கள். தாசிந்தாமணலில் வாழ்ந்த வீர கரையார் மறவர்கள். இவர்கள் வாள்வீச்சிலும்இ தற்காப்பு கலையிலும் வல்லவர்களாகஇருந்த பரம்பரைக்கு முடிந்து போன வரலாற்று நிகழ்வுக்கு நாம் சான்று.
கோடியாக்கரை அம்மன் தோணியில் வந்து குடியேறிய தாசிந்தாழ் மணல் ஊர் வாள்வெட்டி ஊர் என்று அழைக்கப்படுகின்றது. இது கரையும் கரை சார்ந்தநெய்தல் நிலம். சற்று உள்ளே உள்ள நிலம் விவசாய நிலம். அங்குதான் வல்லிஎன்ற தனவந்தர் கால்நடை பட்டிகள் வைத்திருந்தபடியால் வல்லிபட்டி என்ற ஊர் வல்வெட்டியானது.
கரையில் வாழ்ந்த மக்கள் ஈட்டிகளால் மீன்கள் குத்திப்பிடித்து வாழ்ந்தவர்கள் காலப்போக்கில் கட்டுமரங்கள் செய்து பாய்க்கப்பலோடும் அளவுக்கு வாள்வெட்டி ஊர் துறைமுகமானது. கட்டுமரம் என்ற சொல் ஆங்கிலவார்த்தையில் கட்டுமரம் என்றே அழைக்கப்படுகின்றது.
வல்வையர்கள் இரவில் சூள் எரித்து வாளால் மீன்களை தாக்கி மீன் சேகரித்து கொள்வார்கள்.வல்வையரின் வாள் நூற்றாண்டு கடந்தும் பாவனையில் இருக்கின்றது.
வல்வை வயலூரான் தீருவில் திடலும் பல நாட்டு படைகளும் படுத்துறங்கிய வீரத்திடலது. இன்று மாவீரர் மகிமை பெற்றது. பக்கத்தில் உள்ள கொம்பன்மூலை என்ற இடத்தில்தான் ஏற்றுமதிக்கான யானைகளும் போர் படை யானைகளும் சொந்தமாக யானைகளும் வளர்க்கப்பட்ட இடம். இன்று பெயர் மருவி கம்பர்மலை என்று வழங்ப்படுகின்றது. இதன் பக்கத்தில் உள்ள இடம் கொம்பன்தறை என்று அப்படியே அழைக்கப்படுகின்றது.
வல்வை வையித்தீஸ்வரன் கோயிலும் 2000 ஆண்டுகளுக்கு முன்னது.
தற்போதுள்ளது இரண்டாவது தடவையாக கடப்பட்டதுதான். ஆனால் சிவன்கோவிலில் நாம் கால் கழுவும் கிணறு பக்கத்தில் உள்ள சிறிய பெரியதொட்டிகளில் உள்ள கல்வெட்டுக்கள் 2000 வருடம் பழைமையானது எனஇலங்கை தொல்பொருள் ஆய்வாளர்கள் சான்றுகள் வழங்கி உள்ளார்கள். இவ்ஆய்வுகள் காட்டுவளவு துரைசிங்கம் குமரேசன் மற்றும் கனடாவில் தற்போது வசிக்கும் பொன்னம்பலம் சிவகுமார் ஆய்வுகள் செய்து பத்திரிகைகள் இணையத்தளங்களில் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். துரைசிங்கம் குமரேசன்அவர்கள் தமிழ்நாட்டு அரசால் ஜெயலலிதாவிடம் பெரும்சபையில் பாராட்டுக்கள்பதக்கங்கள் பெற்றவர். பொன்னம்பலம் சிவகுமார் அவர்கள் வல்வையையும் பிரபாகரன் வரலாற்றையும் தொகுக்கத் தொடங்கியவர் இன்று இல்லாளன் முதல் பிரபாகரன் என்ற தமிழின் ஆறாவது காப்பியம் வரையப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
எமது ஊரின் பெயர் வாள்வெட்டித்துறை என்று இருந்து அன்னிய நாட்டவர்களால் ஆளப்பட்டு வரலாறுகள் வெவ்வேறு பாசைகளில் பதியப்பட்டு திரிபுபடுத்தப்பட்டதால் வல்வெட்டித்துறை வல்வை என்று குறுகிக்கொண்டது.
இதே கதைதான் எமது தமிழ்மன்னன் இல்லாளனின் பெயர் எல்லாளன் என்று மருவிக்கொண்டது.
அடுத்து எமது நூற்றாண்டுகள் கடந்து நிற்க்கும் கல்விக்கோயில் சிதம்பராக்கல்லூரியின் பெயரும் சிதைவுற தொடங்கியுள்ளது. வாள்வெட்டித்துறையில்சுமார் பல தலைமுறை குருகுலம் பெற்றவர்கள். இன்று அதன் பெயர் ஒரு “h “ நீக்கபட்டு பிழையான உச்சரிப்பில் பெரிய எழுத்தாகவும் கம்பி கிறில் போன்றவற்றில் எழுதப்பட்டுள்ளது. இவ்விடையம் அதிபர்கள் பழையமாணவர்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டது. ஏன் திருத்தங்கள் செய்யவில்லை.
இன்று வல;வையில் பத்து யார் தள்ளி மலசலம் கழிப்பதற்கும் போவதற்க்கும்மோட்டார் சைக்கிளை பாவிக்கும் ஒரு இளைய சமூகம் உருவாகி விட்டது. வல்வையர் கால் நடையற்ற ஊராக மருவி வருகின்றுது.
கோயில் இல்லாத ஊரில் குடியிக்க வேண்டாம் என்பது முது மொழி. நாங்கள் வாள்வெட்டித்துறையர் கோயில்களேயே ஊராக வைத்திருக்கின்றோம்.
கௌரவநடனசிகாமணி நகுலசிகாமணி அவர்களின் ஆவணகாப்பக நூலில் 38கோயில்கள் இருப்பதாக பதியபட்டுள்ளது. எமக்கு எத்தனை பேருக்கு தெரியும் கோயில் வாசலில் அல்லது கொடி மரத்தின் கிழ் உள்ள பிள்ளையாரிடம் அனுமதிபெறாமல் மூலவர்களை வணங்கக் கூடாது. பலருக்கு கோயில் பிரத்தனைகளின் பலன் கிடைக்காமல் போன காரணம் இதுவே.
ஊரில் இத்தெய்வங்களையும் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலமுதியவர்களை விட நாமெல்லாம் ஓடிப்போனவர்கதான். சிலர் காட்டுக்குள் சிலர் இந்தியாவுக்கு நாம் பலர் கண்டம் கடந்து போனோம்.
ஊரில் வெளி நாடு போனவர்கள் காசு மட;டும் தந்தால் போதும் அது இது ஒன்றும் கதைக்க கூடாது என்ற மனநிலையில் பலர் ஊரில் இருக்கின்றார்கள்.
வல்வை முத்துமாரியின் நேத்திக்காக பலர் கரகம் எடுக்கின்றார்கள் ஒரு சிலர் தான் தீ மிதித்தும் நேர்த்தியை நிறைவு செய்கின்றார்கள். இதில் காலங்காலமாக கரகம் தெருவீதி சுற்றி முடிந்து மணல் கிணற்றில் தலை முழுகி தீ மிதிக்க வருவார்கள். அப்பொது தன் செடில்பிடிப்பவர்கள் அக்கயிறை முதுகில் கட்டிவிட்டு விலகிக்கொள்வார்கள்.
அப்போது இத் திருத்தொண்டுகள் உடுக்கடிப்பவர்கள் இலவசமாகவே செய்தார்கள். இப்போது செடில்பிடிப்பவர்களும் சேர்ந்தே தீ மிதிக்கின்றார்கள். இவர்கள் தீக்காயம் சுட்டுமருத்துவ சிகிச்சை எடுத்திருந்ததை நான் நேரில் பார்த்து இருந்தேன். நேர்த்தி செய்பவர்கள் வாளிகளால் நீர் உற்றப்பட்டு உடுக்கு பறைகளால் உருவேற்றப்பட்டுத்தான் தீயில் இறக்கப்படுவார்கள்.
அம்பாளின் நேர்த்தியில் தீக்காயம் ஏற்படுவது ஒரு சிறிய விடயமல்ல. ஒருவருக்கு தீ காயத்தால் ஏற்பு மரணங்கள் வரை சென்றால் சட்டம் தீ மிதிப்பை நிரந்தரமாக தடைசெய்யும் நிலை வரலாம். என் சிறுவயது பிரயத்தில் 1953 பள்ளித்தோழன் தில்லையம்பலத்தின் தகப்பனார் திருமேனிப்பிள்ளை அப்பா அவர்கள் அம்பாளின் தீ மிதிக்கப்படும் போது தீயில் சர்வசாதரணமாக நடந்து போவதுடன் தலையிலும் தீயை கிள்ளி போட்டுக;கொண்டு கோயில் உள்ளே சென்று விடுவார்.
கோயில் நிர்வாகம் இவ்விடையத்தில் அக்கறை கொள்வது நல்லது.
உலகமெல்லாம் பரந்து வாழும் வல்வையர்களுக்கு புதிய வரலாற்று செய்தி.
கோடியாக்கரையிலிந்து வந்த முத்துமாரி அம்பாள் வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மனாக நாலவது கண்டத்தில் கோயில் கொள்ள இருக்கின்றார்கள்.
கடந்த ஒரு சில மாதங்களாக அவுஸ்திரேலியா சிட்னி நகரில் இறுதி ஞாற்றுகிழமைகளில் அம்பாளின் புகைப்படம் வைத்து பூஜா செய்தவர்கள் அடுத்த கட்டபணியாக ஒரு அம்பாளின் விக்கிரகம் செய்து பிரதிஸ்டைசெய்வுள்ளார்கள்.
எதிர் காலத்தில பல ஏக்கர் நிலம்வாங்கப்பட்டு வல்வெட்டித்துறையில் உள்ள அம்மன் கோயில் யாவும் அதே பிரமானத்துடன் நிள அகல விக்கிரங்கள்அமையவுள்ளது. தற்போது அம்பாளின் திருவுருவம் ஊர் அம்பாளேயே அச்சுவார்க்கப்பட்டு திருகோணமலையில் நிறைவு செய்யப்பட்டு ஊரில்அம்பாளின் சன்னதியில் சகல சடங்குகளும் எண்ணைக்காப்பு மண்டலாஅபிசேகங்களும் நிறைவு செய்யப்பட்டு வல்வையரின் விட்டு முற்றத்தில; ஒரு நுள்ளு மண் சேகரிக்கப்பட்டு வல்வையரின் மண்ணில் சிட்னிவல்வெட்டித்துறை அம்பாள் நாலாவது கண்டத்தில் அமர்ந்து அருள் பாலிப்பார். அங்கு ஒரு சில அம்பாள் அடியார்களால் இவ்முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
2018 ம் ஆண்டு வல்வையர்களின் நம்பிக்கை வருடமாக அமைகின்றறது.
இங்கிலாந்தில் வாழும் இளம் வல்வையர் சமுதாயமும் மகிழ்வான நம்பிக்கையான பாதையில் பல நட்புக்குழுக்களை அமைத்து முகவுரையை எழுத்தொடங்கி உள்ளார்கள். ஆரோக்கியமான சமுதாயமாக மாறிவருகின்றது.
சகல நட்புக்குழுக்கழுக்கும் ஒரு விண்ணப்பம் இங்கிலாந்து வல்வையர்களின் ஒருதாகமும் மௌனித்து தான் இருக்கின்றது. அதுதான் இங்கிலாந்து வல்வை அரங்கு.கலாநிதி சபா.இராஜேந்திரன் அவர்களால் பல கட்டங்ளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது நீங்கள் சிறுவர்கள் பலர் இந்த நாட்டுக்கு வந்திருக்கமாட்டிர்கள். நாங்கள் வந்த கடன் பெண்டில் பிள்ளைகள கூப்பிடஏஜண்டிடம் ஏமாந்த கடன் எங்களால் முடியாது தோற்றுத்தான் போனோம். இன்றுஈழநிலம் இங்கிலாந்தில் 138 ஏக்கர் வாங்கியமாதிரி நாங்கள் குறைந்தது2000வல்வையர்கள் இணைந்து 200 ஏக்கர் சொந்த நிலம் வாங்கி கோயில் குளம் வல்வை அரங்கு விளையாட்டுத்திடல் சுற்றவர சொந்த வீடுகள் கட்டும் தகமையில் இருக்கின்றோம். முயற்சித்தால் முடியும்.
எமது வல்வை மண் காலையில் சூரிய உதயத்தையம் அஸ்தமனத்தையும் காணும் புண்ணிய பூமியது. ஓரு காலத்தில் மாலை 6 மணிக்கு பிறகு அன்னியர்கள் வியாபாரிகள் எவருமே தங்க அனுமதித்ததில்லை. யாழ் குடாநாட்டில் மிகவும் சுத்தமான ஊர் என்ற பாராட்டுக்ள் பெற்றிருக்கின;றோம்.
வல்வையில் யாரோ நட்ட ஆலும் அரசும் வேம்பும் வல்வையின் இடங்களை சொல்லிக் கொண்டிருக்கின்றது. வல்வையில் வாழ்ந்த தனவநத்ர்கள் சிதம்பரப்பிள்ளை அவர்களால் சிதம்பராக் கல்லூரியும் அப்புகுட்டியாபிள்ளையும் விஸ்னுசந்தரமும் ஆஸ்பத்திரியையும்இ தாண்ட கப்பலை விலைக்கு வாங்கி திரைகடலோடி திரவியத்தால் கோயில்களை கட்டிவைத்தார்கள். இவைகள் தான் வல்வையின் முகவரிகள். புலம்பெயர்ந்த நாலு கண்டத்தில் வாழும் 5000 வல்வையர்களால் கலியாண மண்டப கடனை அடைக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றோம்.
காலச்சக்கரம் சுழல்கின்றது எல்லம் மாறிமாறித்தான் வரும்.
புலம்பெயர்ந்த வல்வையர்களே இவ்வருடம் அம்பாள் திருவிழாவுக்கு வரமுயற்சி செய்யுங்கள் நீங்களும் மீண்டும் தாயூரை மிதிக்காதவரை தோற்றுப்போனவர்கள்தான்.
வல்வையின்வாசம் இப்போதும் அப்படியேதான் இருக்கின்றது.எதைநுகர்கிறீர்களோ அதைத்தான் உங்களால் நுகரமுடியும்.
நாளைய வல்வை வரலாறு உங்கள் காலத்திலோ உங்கள் அடுத்த சந்ததியில் வாள்வெட்டத்துறை என்ற வரையறைக்குள்ள மண்ணில் பாதரட்சைகள் போடாமல் அங்கு வாழ்பவர்களும் அம்மண்ணுக்கு வரும் அன்னியர் எவருமே வாழும் காலத்தை எழுதிச்செல்லும்.
உலகில் இந்து தர்மத்தை பூரணத்துவமாக பேணிக்காத்தது. வாள்வெட்டித்துறைமண்தான். இது கிருபானந்தவாரியரின் வாக்கு. பல காலம் வல்வையிலும் வாழ்ந்து வல்வையின் தனவந்ததுகளின் உதவியுடன் பல கோயில் திருப்பணிகளை செய்தவர். அன்னரின் மூன்று சீடர்களில் ஒருவரhன வல்வை இரா.சிவஅன்பு ஒருவர் மட்டும் பிரசங்கம் செய்தவர். சிவஅன்பின் தம்பியார் சிவசோதி அவர்கள் இங்கிலாந்து வரை வில்லிசையில் சைவம் வளர்த்தவர்கள்.இவர்களின் தகப்பனார் அம்பாளின் கோபுரத்தில் உள்ள சில சிற்பங்கள் கிணற்றடி வைரவர் சிற்பம் வரை செதுக்கியவர். பல மணிநேரம் அருகில் இருந்து பார்த்திருக்கின்றேன்.
திருவண்ணாமலையை நினைத்தாலே முத்தி
வாள்வெட்டித்துறையில் பிறந்து வாழ்ந்தவர்களுக்கு மறுபிறவியில்லை.
நம் வாழ்வை தொலைத்தாவது வல்வை வரலாற்றை பக்குவப்படுத்துங்கள்.
வல்வை வாசமுள்ளவர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய
சோ.செ.தெய்வச்சந்திரன்.