யாழ் மாவட்ட மெய்வன்மைத் தொழில் நுட்பச்சங்கதின் தலைவராக பலத்த இழுபறிக்குப்பின் இரகசிய வாக்கெடுப்பின் பின் மா.இளம்பிறையன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
குறித்த சங்கத்தின் பொதுக்கூட்டம் நீண்ட கால இடைவெளிக்குப் பின் நேற்று கொக்குவில் இந்துக்கல்லூரி மண்டபத்தில் மி.இளம்பிறையன் தiலமையில் இடம்பெற்றது.
இதன்போது புதிய தலைவருக்கான தெரிவில் முன்னாள் தலைவர் மா.இளம்பிறையன் மற்றும் எஸ்.சதீஸ்குமார் ஆகியோர் போட்டி இட்டனர்.இவர்கள் இருவரும் இரகசிய வாக்nகடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். 60 பேர் வாக்களித்ததில் 34 வாக;குகளை இளம்பிறையனும் 25 வாக்குகளை சதீஸ்குமாரும் பெற 9 வாக;குகளால் இளம்பிறையன் வெற்றி பெற்று மீண்டும் தலைவரானார்.உபதலைவர்களாக சி.வசந்தகுமார் ,எஸ்.சதீஸ்குமார் ,கே.சுதாகரன் ஆகியோரும் செயலாளராக எஸ் சிவச்செல்வனும் ,உப செயலாளராக ஜி.கே கிறேசியனும், பொருளாளராக எஸ்.கஜேந்திரனும் தெரிவு செய்யயப்பட்டனர்.
நிர்வாக உறுப்பினர்களாக வடமராட்சிக்கு எஸ்.சுரேந்திராவும், வலிகாமத்திற்கு எஸ். ஜெயந்தனும் ,தென்மராட்சிக்கு கே.கணநாதனும் ,யாழ்ப்பாணத்திற்கு எஸ்.ஸ்ரீரமணனும் ,தீவகத்திற்கு எஸ் .அனோஜனும் ,கிளிநொச்சிக்கு எஸ் ஹரனும் தெரிவு செய்யப்பட்டனர்.