கடந்த பல ஆண்டுகளாக நீதிமன்றில் நடைபெற்ற வழக்கின இறுதியில் ஒரு கோடி ரூபா கட்டட ஒப்பந்தகாரருக்கு கட்டும்படி நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பா.உதயகுமார் தலைமையிலான நிர்வாகசபையால் 06.09.2017 ரூபா 50 இலட்சம் கடன் வழங்கப்பட்டது. தொடர்ந்து தற்போது வல்வை பிரித்தானிய நலன்புரிச்சங்கம் வழங்கிய ரூபா 25 இலட்சம் நேற்று 28.12.2017 நீதிமன்றில் செலுத்தப்பட்டது. மிகுதி 25 இலட்சம் ரூபாவும் எதிர்வரும் 28.02.2018 இல் கட்டி முடிக்கப்பட வேண்டும். இவ் மிகுதிக் கடனை அடைப்பதற்கு அம்பாள் அடியார்கள் அனைவரும் ஒத்தாசை புரியுமாறு நிர்வாகசபை தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறது. அத்துடன் இதுவரை உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
Home அம்மன் கோவில் வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருமணமண்டப கடனில் 2ஆம் பகுதி நீதிமன்றில் செலுத்தப்பட்டது