வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் பதக்கம் வழங்கி கௌரவிப்பு

0
523 views

வட மாகாண விளையாட்டுத்திணைக்களத்தால் விளையாட்டுத்துறையில் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் சாதனை படைத்த வீர வீராங்கனைகள் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடத்தப்படும் பெருவிளையாட்டு தட களப் போட்டிகளில் மாகாண தேசிய மட்டச் சாதனை படைத்த சாதனையாளர்கௌரவிக்கும் 8 ஆவது வர்ண இரவுகள் விருது வழங்கும் நிகழ்வு நேற்று சாவகச்சேரி நகரசபை பொன் விழா மண்டபத்தில் இடம்பெற்றது .
இதில் தேசிய மட்டம் மாகாண மட்டத்தில் சாதனைகளை நிலைநாட்டிய பாடசாலைகள் உட்பட முன்னூறுக்கு மேற்பட்ட வீரவீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டனர்.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.ரவீந்திரன் வடமாகாண கல்விப்பணிப்பாளர் சி.உதயகுமார் உட்பட பலரும் வழங்கிக் கௌரவித்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here