கடந்த வருடம் பட்டப்போட்டியினை ஜபிசி தொலைக்காட்சி வல்வையில் இருந்து சிறந்த முறையில் நேரலை செய்திருந்தனர். இதன் மூலம் ஜரோப்பா வாழ் தமிழர்களும் பட்டப் போட்டியினை பார்த்து மகிழ்ந்தனர்.
இந்த வருடமும் ஜபிசி தொலைக்காட்சி பட்டப் போட்டியினை ஒலிபரப்பவுள்ளனர். இதற்கு முன்னோட்டமாக ஜபிசியில் ஞாயிற்றுக்கிiமைகளில் இடம் பெறும் ஊரோடு உறவாடு நேரலை நிகழ்ச்சியில் ஜபிசி சுதர்சனுடன் உதயசூரியன் கழக அங்கத்தவர்கள் இரத்தினசிகாமணி (குண்டையா), சங்கர் ஆகியோர் பட்டப் போட்டி சிறப்புக்கள் பற்றி கலந்துரையாடினர்.