சன்னிதியான் ஆச்சிரமம் நடாத்தும் வருடாந்த திருவாசக விழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற;றுக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஆசியுரையை நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமஸ்கந்த பரமச்சாரிய சுவாமிகள் நிகழ்த்துவார். தொடர்ந்து பலாலி ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் தலைமையில் திருவாசகம் என்னும் தேன் என்ற தலைப்பில் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. இதில்திருவாசகத்தில் பக்தி நெறி என்ற தலைப்பில் சைவப்புலவர் திருமதி சசிலேகா ஜெயராசாவும், திருவாசகத்தில் வாழ்க்கை நெறி என்ற தலைப்பில் உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர் எஸ்.செந்தூர்ச்செல்வனும், திருவாசகத்தில் தத்துவம் என்ற தலைப்பில் ஊவா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ் .சர்வேஸ்வராவும் உரைநிகழ்த்தவுள்ளனர்.
தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 160 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.