வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையத்தால் தைப்பொங்கல் திருநாளில் நடாத்தப்படவுள்ள 2018 பட்டப்போட்டித் திருவிழாவில் முதல் பரிசாக ஒரு பவுண் தங்கப்பதக்கம் வழங்கப்படவுள்ளதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர் மேலும் லட்சம் ரூபாவிற்கு மேல் பெறுமதியான பரிசுகளும் பணப்பரிசும் 30 இற்கு மேற்பட்ட பட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேற்படி விபரங்களை இன்றைய தினக்குரல் பத்திரிகை விளம்பரங்களிலும் பார்க்கக் கூடியதாகவுள்ளது.