தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஆசனப் பங்கீடு தொடர்பாக மீண்டும் குழப்பபம் ஏற்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளன. அந்த வகையில் மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஆசனப்பங்கீடு தொடர்பான கலந்துரையாடி சில விட்டுக்கொடுப்புக்களுடன் போட்டியிடத்தீர்மானித்தன
ஆனால் இந்த தீர்மானத்தை தமிழரசுக்கட்சி மீறியுள்ளது புளொட்டுக்குத் தருவதாக உறுதியளித்த சபைகளையும் ஆசனங்களையும் வழங்க மறுத்தது ஏமாற்றியதை அடுத்து அவ்வமைப்பு தேர்தலில் இருந்து ஒதுங்கி புறக்கணிக்கப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் கூட்டிலுள்ள மற்றைய கட்சியான ரெலோவும் கூட்டில் இருந்து விலகி தனிக்கட்சியாக களமிறங்க முனைப்புக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்னும் ஓரிரு தினங்களில் தமிழரசுக்கட்சியுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அதில் உரிய முடிவு எடுக்கப்படாவிட்டால் கூட்டிலிருந்து பிரிந்து தனியாக நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுமென ரெவோவின் உயர் பதவியுள்ள ஒருவர் தெரிவித்தார்