புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் பயணிகள் பெரும் அசௌகரியங்ஙளை எதிர்நோக்கியுள்ளனர்.
புகையிரதச் சாரதி உதவியாளர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான முறைமையில; உள்ள இடர்பாடுகளை அடுத்து நேற்று முன்தினம் முதல் புகையிரதச் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கொழும்பிலிருந்து யாழ் குடாநாட்டிற்கு வருவோர் பெரும் இடர்களைச் சந்தித்து வருகின்றனர்
குறிப்பாக முன் ஆசனப்பதிவுகளை மேற்கொண்டவர்களும் இலவச புகையிரதப்பற்றுச் சீட்டைப் பயன்படுத்தி முன் ஆசனப்பதிவுகளை மேற்கொண்ட அரச ஊழியர்களும் இப்பணிப்புறக்கணிப்பால; பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழ் குடாநாட்டிலுள்ள ளபுகையிரத நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டு பணியாளர்கள் இன்றி வெறிச்சோடிக்காணப்படுகின்றன. அத்துடன் சில புகையிரத நிலையங்களின் அதிபர்கள் தங்கள் நிலையங்களைப் பூட்டி அதன் திறப்புக்களை பொலிஸ் நிலையங்களில் ஒம்படைத்துள்ளதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிபர் ஒருவர் தெரிவித்தார்.