ஓகி புயலினால் 7 பேர் பலி- சிவப்பு எச்சரிக்கை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது

0
924 views

 

வங்கக் கடலில் உருவான ஓகி புயல், நேற்றிரவு இலங்கையைக் கடந்து சென்ற போது சூறைக்காற்றுடன் கொட்டிய மழையினால், இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாவும் 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் கூறியுள்ளது. இதேவேளை, 20,000க்கும் மேற்பட்டோர் இதனால் பதிப்புகுள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் நேற்றிவு முதல் நிலவிய மோசமான வானிலையால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மரங்கள் முறிந்து விழுந்தமையால் இதுவரையில் இருவர் பலியாகியுள்ளனர். வள்ளம் கவிழ்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். இதேவேளை, இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 15 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோசமான வானிலையை அடுத்து, மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் மற்றும் மேல் ஆகிய மாகாணங்களில் பாடசாலைகள் இன்று மூடப்பட்டன.இன்றையதினம் நடத்தவிருந்த இறுதித்தவணைப் பரீட்சைகளை பிரிதொரு தினத்தில் நடத்துமாறு கல்வியமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதேவேளை, களனிவெளி, கரையோர மற்றும் மலையகத்துக்கான ரயில் ​சேவைகள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய, விமானங்களில் சில, மத்தல விமான நிலையத்துக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டன.இந்த மோசமான வானிலையை அடுத்து, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, பல பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here