தமிழ் மக்களுக்கான தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் குடும்பத்தினர், முன்னாள் போராளிகள் மற்றும் விசேட தேவையுடைய முன்னாள் போராளிகளுக்கான நலத் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வல்வெட்டி துறையிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்தில் வைத்து நாளைய தினம் இந்த நலத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.