வல்வெட்டித்துறை ரேவடி உல்லாசக் கடற்கரையில் அமைக்கப்படும் நீச்சத்தடாகத்திற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர 8கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வல்வை உல்லாசக் கடற்கரையில் நீச்சல் தடாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டபோதும் அதன் பணி அப்படியே இருந்து வருகின்றது.
இந்நிலையில் அண்மையில் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிச்கம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்ஙள சமரவீரராவைச் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடினார்.
இதன்போதே நீச்சல் தடாகத்தின் நிர்மாணிப்பு பணிகளை எதிர்வரும் ஜீலை மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறும் அதற்காக முதற் கட்டமாக 8 கோடி ரூபாவை வழங்குவதாகவும் அதன் பின்னர் இரண்டாம் கட்டத்தேவைகளுக்காக மேலும் 4 கோடி ரூபாவை வழங்குவதாகவும் நிதியமைச்சர் உறுதியளித்துள்ளதாக சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.