தேசிய மட்ட பூப்பந்தாட்டப்போட்டியில் 42 வருடங்களுக்குப் பின் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது வட மாகாண ஆடவர் அணி.
42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான ஆண்களுக்கான பூப்பந்தாட்டப் போட்டி கொழும்பு மேக்கன்டைன் தேசிய பூப்பந்தாட்டத்திடலில் இடம்பெற்று வருகின்றது.
அதில் நேற்று இடம்பெற்ற காலிறுதியாட்த்த்தில் வட மாகாண அணியும் வடமத்திய மாகாண அணியும் மோதின.
3 தனிநபர் ஆட்டங்களையும் 2 இரட்டையர் ஆட்டங்களையும் கொண்ட இப்போட்டியில் வட மாகாணம் சார்பாக களமிறங்கிய றெமின்சன் துசாந்தன் ஆகியோர் முதல் இரு வெற்றிகளையும் பதிவு செய்தனர். தொடர்ந்து மூன்றாவது தனிநபர் ஆட்டத்தில் களமிறங்கிய பிரணவன் அதனை வட மத்திய மாகாணந்திடம் பறிகொடூத்தார்.
இதனைத் தொடர்ந்து இரட்டையந் ஆட்டத்திற்கு தள்ளப்பட்ட வட மாகாண அணி றெமின்சன் துசாந்தன் இணை மூலம் அதனை வெற்றி கொண்டு 3:1 என்ற அடிப்படையில் அரையிறுதிககு முன்னேறியது.
வடமாகாண அணி 42 வருடங்களுக்குப்பின் அரையிறுதி ஆட்டத்திற்கு முதற்தடவையாக முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறும் அரையிறுதியில் மேல்மாகாண அணியை எதிர் கொள்கிறது வடமாகாண அணி