சுவிஸ் நாட்டின் தேசிய Hockey அணியில் இடம்பெறும் வல்வை இளைஞன்

0
1,245 views

வல்வையில் சிவா அண்ணா என்று அன்பாக அழைக்கப்படும் திரு. நாகரெத்தினம் சிவசுப்பிரமணியம் அவர்களின் பேரன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் சுவிஸ் நாட்டின் தேசிய Hockey அணியில் இடம்பிடித்துள்ளார்.
சுவிஸ் நாட்டின் தேசிய InlineHockey U19 அணியில் விளையாட தெரிவாகியுள்ள முதல் தமிழ் இளைஞனாக அஷ்வின் சிவசுப்பிரமணியம் தெரிவாகியுள்ளார். 15 வயதேயான இவர் சுவிஸ் நாட்டின் InlineHockey U19 அணியின் பந்து காப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறுவயது முதல் சுவிஸ் நாட்டின் முண்ணனி Ice Hockey கழகங்களுக்கான EHC Bienne,HC AJOIE ,HC Delemont ,SHC Rossemaison ஆகிய கழகங்களுக்கு பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார்.
2013 ஆம் ஆண்டு ஜேர்மனியில் 2015 கனடாவில் 2017 சுவிஸில் நடைபெற்ற உலக ஐரோப்பிய சுவிஸ் சம்பியன் கிண்ணத்துக்கான சுவிஸ் அணியின் பந்து காப்பாளராக பங்குபற்றி விருதுகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சிறிய வயதில் சுவிஸ் நாட்டின் தேசிய Hockey அணியில் பந்து காப்பாளராக இடம்பிடித்து தமிழர்களுக்கும் வல்வை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here