மருதங்கேணிப்பகுதியில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 7மணிக்கு இடம்பெற்ற இச்சம்பவத்திலு தாளையடி வத்திராயனையைச்சேர்ந்த சிற்றம்பலம் சத்திறசீலன் (வயது 50) உயிரிழந்தவராவார்.
அண்மைக்காலமாகவடமராட்சி கிழக்குப்பகுதியில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றுக்காலை வடமராட்சிகிழக்கு மருதங்கேணி தெற்க்கு கந்தசாமிகோயில் முன்பக்கப்பகுதியில்.மாடுமேக்கச்சென்ற வயோதிபரே யானைத்தாக்குதலுக்கு இலக்காகி உயரிழந்துள்ளார்.இவருடைய சடலம் மருதங்கேணிவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பினனர் பளைப்பகுதி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது