பிரித்தானிய வல்வை மக்களின் பேரால் பிரித்தானிய வல்வை நலன் புரிச்சங்கத்தின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளின் அடிப்படையில்
தாயகத்திலே வறுமையை எதிர்கொண்டு கல்வியை கற்கும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் முகமாக
மு/சுதந்திரபுரம் தமிழ்
மகாவித்தியாலய மாணவர்களுக்கு பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று சுமார் ரூபா 150000 பெறுமதியான அப்பியாசப்புத்தகங்கள் வழங்கும் வைபவம் பாடசாலை மண்டபத்தில் கோட்டக்கல்விப்பணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 340 மாணவர்களுக்கு ஒரு தவணைக்கு தேவையான அப்பியாசகொப்பிகள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன.
இந்தப்பாடசாலையானது விசுவமடு புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் இருந்து சுமார் 5 மைல் உள்ளே அமைந்துள்ளது.
இந்த பாடசாலை மாணவர்களின் வறுமைபற்றிய செய்திகள் ஏற்கனவே இணையத்தில் செய்திகளாக வந்திருந்தது யாவரும் அறிந்ததே.
இந்த உதவிச் செயற்பாட்டுக்கான ஒரு பகுதி பணத்தினை (£250 )வல்வை 1976 நண்பர்கள் தந்துதவியது இங்கு குறிப்பிடத்தக்கது. லண்டன் வாழ் 1976 நண்பர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வருடம் மேலும் இவ்வாறான பல செயற்பாடுகளை தொடர்ந்த செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளோம் என்பதனையும் இங்கு குறிப்பிடவிரும்புகின்றோம்.
ஒவ்வொரு செயற்பாடுகளும் பூர்த்தியான பின்னர் விபரங்கள் உங்களுக்கு அறியத்தரப்படும்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளில் வல்வை மக்களாகிய நீங்களும் பங்கெடுக்க விரும்பினால் எம்மோடு தொடர்புகொள்ளவும்.
நன்றி.
வல்வை நலன்புரிச் சங்கம் பிரித்தானியா