வடமராட்சி கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளராக இன்று முதல் செயல்ப்படும் வகையில் சிவபாதம் நந்தகுமார் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இரவீந்திரன் அவர்களினால் நேற்றயதினம் அவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அவர் இன்று தனது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.
வடமராட்சி கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி புஸ்பலிங்கம் அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றதன் பின்னர் பணிப்பாளர் பதவிக்கான வெற்றிடம் நிலவிவந்தது. அதனை நிரப்புவதற்காக மாகாண கல்வி அமைச்சு விண்ணப்பங்களை கோரி நேர்முகத் தேர்வினையும் நடாத்தியிருந்தது. நேர்முகத் தேர்வில் சி.நந்தகுமார் முன்னிலை பெற்றிருந்தார். ஆயினும் நியமனங்கள் வழங்குவதில் நீண்டநாட்கள் தாமதங்கள் நிலவின. எனினும் தடைகளை தாண்டி நீண்ட இழுபறிக்கு மத்தியில் திரு.சிவபாதம் நந்தகுமார் வடமராட்சி கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
இவர் முன்னர் நீண்டகாலம் வடமராட்சி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில் கல்வியமைச்சின் உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 2ஐச் சேர்ந்த தற்போது கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டபோதும் 2018ம் ஆண்டு நவம்பர் மாத்த்துடன் ஓய்வு பெறும் வயதை எட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.