மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற தொண்டைமனாறுவீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவன் நா.தருண் நேற்று தொண்டைமனாறு கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
அண்மையில் இடம்பெற்ற ஒலிம்பியாட் பரீட்சையில் வடமராட்சி கல்வி வலயத்திலிருந்து 4 மாணவர்கள் சித்தியடைந்தனர் அவர்களில் தொண்டைமனாறு வீரகத்தி பிள்ளை மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய நா.தருணும் சித்தியடைந்து தேசியப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வித்தியாலய அதிபர் இரா .ஸ்ரீநடராசா தலைமையில் இடம்பெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில் தொண்டைமனாறு கல்வி மேம்பாட்டுப் பேரவையின் தலைவர் த.குமார் செயலாளர் எல்.தர்சன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கை.கிருபாகரன் ஆகியோர் பாராட்டுரைகளை வழங்கிக் கௌரவித்தனர்.