வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை விசாரணைக்கு கொழும்புக்கு வருமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
பெளத்த பிக்கு ஒருவரை அவதூறாக பேசினார் என்ற குற்றச்சாட்டில் சிவாஜிலிங்கத்திடம் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தே குற்றப் புலனாய்வுப்பிரிவு இன்றைய தினம் அழைப்பு விடுத்துள்ளது.
இது விடயம் குறித்து மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியது
இன்று முற்பகல் 11.30 அளவில் தொலைபேசியில் தொடர்புகொண்ட குற்றப் புலனாய்வுத் துறையினர் கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்ததாகவும்
ஆனாலும் குறித்த விசாரணைக்காக கொழும்புக்கு வருவதற்கு தான் தயாராக இல்லை என கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொழும்புக்கு வருவதற்கு இயலாத நிலையில் தான் இருப்பதாகவும் எனவே விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு விசாரணையாளர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்புமாறு தமக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தவர்களுக்கு கூறியுள்ளதாகவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.