மாகாண மட்டத் தடகளப் போட்டியில் பங்கு பற்றி சாதனை படைத்த யாழ் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவர்கள் பாடசாலை சமுகத்தினால் இன்று பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
வித்தியாலய முதல்வர் இரா ஸ்ரீநடராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ழடமராட்சி வலய உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.செல்வக்குமரன் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் கே.பாக்கியநாதன் மற்றும் சிவன் பவுண்டேசன் இணைப்பாளர் .க.சதீஸ் ஆகியோர் மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கிக் கௌரவித்தனர்