வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 14 வயது ஆண்களுக்கான 4×100 மீற்றர் தொடர் ஓட்டத்தில் உடுப்பிட்டி அ.மி.கல்லூரி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந் நிகழ்வில் 54.7 செக்கன்களில் ஓடி உடுப்பிட்டி அ.மி.கல்லூரி வர்ணச் சான்றிதழுடன் தங்கப் பதக்கத்தையும், 55.1 செக்கன்களில் ஓடிய யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி வர்ணச்சான்றிதழுடன் வெள்ளியையும் ,55.3 செக்கன்களில் ஓடிய பருத்தித்துறை கல்லூரி வர்ணச்சான்றிதழுடன் வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.