வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 10 தடகள விளையாட்டு விழாவில் யாழ் தொண்டைமாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்திற்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
இன்று துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 12 வயதுப் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தை 14.8 செக்கன்களில் ஓடி முடித்து வர்ணச்சான்றிதழுடன் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார் தொண்டைமனிறு வீ.ம.வி மாணவி அ.சிந்துஜா.இவர் எதிர்வரும் மாதங்களில் இடம்பெறவுள்ள பாடசாலை மட்ட தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றவுள்ளார் .இவருடன் 14 வயதுப் பிரிவு ஆண்களுகான உயரம் பாய்தலில் 1.48 மீற்றர் உயரம் பாய்ந்து 4ஆம் இடத்தைப் பெற்ற உ.சிந்துஜனும் தெரிய மட்டப்போட்டிகளில் பங்குபற்ளுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார்.
அத்துடன் 800மீற்றர் ஓட்டத்தில் பங்கு பற்றிய வி.சாமந்தியா 5 இடத்தைப் பெற்றுள்ளார்
இவ்வெற்றியின் மூலம் பாடசாலைக்கும் வடமராட்சி கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அதேவேளை 12 வயது ஆண் பெண்களுக்கான 4× 50 மீற்றர் அஞ்சல் ஓட்ட நிகழ்வில் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.36 அணிகள் பங்குபற்றிய இப்போட்டியில் பல பிரபல பாடசாலை அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது