இளைஞர் கழகங்களுக்கிடையிலான பெண்களுக்கான தேசிய மட்ட எல்லேயில் கொழும்பு மாவட்ட அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது யாழ் மாவட்ட இளைஞர் அணி. அம்பாந்தோட்டை பெலியத்த பொது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இளைஞர் கழகங்களுக்கிடையிலான தேசிய மட்ட எல்லே போட்டியில் கொழும்பு மாவட்ட அணியை எதிர்த்து யாழ் மாவட்ட அணி மோதியது.நாணயச் சுழற்சியில் வெற்றி பெறற கொழும்பு மாவட்ட அணி25 பந்துகளில் 5 ஓட்டங்களைப் பெற்றது .பதிலுக்கு 6 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய யாழ் மவட்ட அணி மூன்று பந்துகள் மீதமிருக்க 6 ஓட்டங்களைப்பெற்று 6:5என்ற அடிப்படையில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குமுன்னேறியது யாழ் மாவட்ட மகளிர் அணி யாழ் மாவட்ட அணி சார்பாக கவிப்பிரியா மற்றும் ஜெனிசந்தியா ஆகியோர் தலா 2 ஓட்டங்களையும் கஜேந்தினி ஒரு ஓட்டத்தையும் பெற்றனர்