பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தினால் வல்வை மக்களின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளின் அடிப்படையில்
சம்புக்குளம் முகாம் பகுதியில் வசித்து வரும் முன்னால் போராளியான ரவிந்திரன் இடுப்பிற்கு கீழ் இயங்காத நிலையிலும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் குடும்பத்தை நடத்த முடியாமல் மிக கஷ்டத்தில் இருப்பதை கருத்தில் கொண்டு நலன் புரிச்சங்கத்தினால் ரூபா 70 000.00அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான நன்றிக்கடிதமும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த உதவிச் செயற்பாட்டுக்கான மொத்தப்பணத்தினையும் சில வல்வை மக்கள் தந்துதவியது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வருடம் மேலும் இவ்வாறான பல செயற்பாடுகளை தொடர்ந்த செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளோம் என்பதனையும் இங்கு குறிப்பிடவிரும்புகின்றோம்.
ஒவ்வொரு செயற்பாடுகளும் பூர்த்தியான பின்னர் விபரங்கள் உங்களுக்கு அறியத்தரப்படும்.
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளியான காந்தரூபன் அவர்கள் கிளிநொச்சி யுத்தத்தின் போது தனது ஒரு கால் இழந்த நிலையில் எந்தவிதமான உதவியும் அற்ற நிலையில் அவருக்கு ஒரு வாழ்வாதார உதவி வழங்கும் முகமாக பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் இன்று ரூபா 85000 பெறுமதியான பசு மாடு ஒன்று வழங்கப்பட்டது. அதற்கான நன்றிக்கடிதமும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த உதவிச் செயற்பாட்டுக்கான மொத்தப்பணத்தினையும் சில வல்வை மக்கள் தந்துதவியது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வருடம் மேலும் இவ்வாறான பல செயற்பாடுகளை தொடர்ந்த செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளோம் என்பதனையும் இங்கு குறிப்பிடவிரும்புகின்றோம்.
ஒவ்வொரு செயற்பாடுகளும் பூர்த்தியான பின்னர் விபரங்கள் உங்களுக்கு அறியத்தரப்படும்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளில் வல்வை மக்களாகிய நீங்களும் பங்கெடுக்க விரும்பினால் எம்மோடு தொடர்புகொள்ளவும்.
நன்றி.
வல்வை நலன்புரிச் சங்கம்
பிரித்தானியா.