மெஸ்சி– ரோகுசோவுக்கு திருமணம்
ரொசாரியோ: அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி தனது இளம் வயது தோழியான ரோகுசோவை கரம் பிடித்தார்.
அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்சி 30. பார்சிலோனா கிளப் அணியிலும் விளையாடி வருகிறார். அர்ஜென்டினாவை சேர்ந்த அன்டானலா ரோகுசோவுடன் 5 வயது முதலே நட்புடன் பழகி வந்தார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக சேர்ந்து வாழ்த்து வந்தனர். இவர்களுக்குஇ தியாகோஇ மடோ என்ற இரு மகன்கள் உள்ளனர்.
நெய்மர்இ சாரஸ் பங்கேற்பு:
இந்நிலையில் மெஸ்சி- ரோகுசோ திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் நேற்று திருமணம் நடந்தது. இருவரும் விஷேசமான ஆடைகளை அணிந்திருந்தனர். நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் கால்பந்து நட்சத்திரங்களுக்கு மட்டுமே அழைப்பு தரப்பட்டிருந்தது. பார்சிலோனா வீரர்களான நெய்மர் சாரஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பார்சிலோனா வீரரான ஜெரார்டு பிகே தனது மனைவியும் ‘பாப்’ பாடகியுமான ஷகிராவுடன் கலந்து கொண்டார்.