வல்வையின் மற்றுமொரு சாதனையை படைத்தது இளங்கதிர் அணி

0
531 views

வல்வை ரேவடி விளையாட்டுக்கழகமானது வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையே 7 நபர் கொண்ட உதைபந்தாட்டதொடரை நடாத்தி வருகின்றது. அந்த வகையில் இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதியாட்டத்தில் இளங்கதிர் B அணியினை எதிர்த்து ரேவடி A அணியானது மோதியது.மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் இளங்கதிர் B அணியானது 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இளங்கதிர் B சார்பாக வி.தனுசன் , ச.தனுசன் தலா 1 கோல்களை பதிவு செய்தனர்.. அதனைத்தொடர்ந்து இரண்டாவதாக இடம்பெற்ற அரையிறுதியாட்டத்தில் இளங்கதிர் A அணியினை எதிர்த்து றெயின்போஸ் அணி மோதியது. ஆட்டத்தின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இளங்கதிர் A அணியானது 6-1 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டி அவ்வணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.இளங்கதிர் A அணிசார்பாக அதிகபட்சமாக பிரசாந்த் 4 கோல்களை பதிவு செய்தார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here