வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணை எதிர்த்து இன்று இடம்பெற்ற ஹர்த்தாலால் வடமராட்சி பகுதி எங்கும் முடங்கியது.
வட மாகாண சபை அமைச்சர்களுக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசேடமாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கைப்படி கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் விவசாயத்துறை அமைச்சர் பொ .ஜங்கரநேசன் ஆகிய இருவரையும் தாமாக பதவியில் இருந்து விலகுமாறும் ஏனைய இரு அமைச்சர்களையும் விசாரணை முடிவடையும் வரை விடுப்பில் செல்லுமாறும் வட மாகிண முதலமைச்சர் சி வி.விக்னேஸ்வரன் சபையில் தெரிவித்திருந்தார்
இதற்கு எதிரப்பு தெரிவிந்து ஆளுங்கட்சி எதிர்கட்சி உறுப்பினர்கள் 15 பேர் கையொப்ப மிட்டு ஆளுனரிடம் நம்பிக்கை இல்லாத பிரேரணையை ஒப்படைத்திருந்தனர்.
இதனைஅடுத்து இதற்கு எதிராக தமிழ் மககள் பேரவை மற்றும் பொது அமைப்புக்களால் பூரண கடையடைப்புக்கு அழைப்பு வடுக்கப்பட்டிருந்தது.இதற்கு ஆதரவு தெரிவித்து நெல்லியடி பருத்தித்துறை உடுப்பிட்டிமற்றும் வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளிலுள்ள மருந்தகங்கள் உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளையும் மூடி ஆதரவளித்தனர்.
பாடசாலைகளில் மாணவர்கள் ஆசிரியர்களின் வரவின்மையால் இயங்கவில்fலை.
ஏறைய அரச திணைக்களங்கள் இயங்கிய பேதும் பொதுமக்கள் வரவு குறைவாகக் காணப்பட்டன.(108)