யுத்த நிறைவின் பின்னராக காலப்பகுதியில் வடபகுதிக்கான ரயில் சேவையினை சுமார் மூன்று கோடி பயணிகள் ஈடுபடுத்தியுள்ளனர்.கடந்த 8 வருட காலப்பகுதியில் வடபகுதிக்கான ரயில் சேவை ஊடாக 29,257,145 பயணிகள் பயணித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வருமானம் 360 கோடி ரூபாவாகும்.
2009 ஆம் வருடத்தில் வடக்கு ரயில் வீதியில் 2,587,500 பயணிகள் பயணித்துள்ள நிலையில் அந்த வருடத்தில் 261,301,720.24 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
2010ஆம் ஆண்டு வடக்கு ரயில் வீதியில் 2,737,800 பேர் பயணித்துள்ள நிலையில் 311,267,564.90 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 2011ஆம் ஆண்டு வடக்கு ரயில் வீதியில் 2,807,199 பேர் பயணித்துள்ள நிலையில் 317,385,990 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
2012ஆம் ஆண்டு அந்த ரயில் வீதியில் 3,792,327 பேர் பயணித்துள்ள நிலையில் 341,883,540 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு வடக்கு ரயில் வீதியில் பயணித்த 3,833,215 பயணிகளினால் 426,680,705 ரூபாய் வருமானமும், 2014ஆம் ஆண்டு பயணித்த 4,049,194 பேரில் 522,545,337 ரூபாய் வருமானமும், 2015 ஆம ஆண்டு பயணித்த 4,336,797 பேரில் 682,728,628 ரூபாய் வருமானமும் கிடைத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக 2016ஆம் ஆண்டு 4,421,985 பேர் பயணித்துள்ள நிலையில் 718,884,158 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
2017ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் அந்த ரயில் வீதி ஊடாக பயணித்த 691,128 பயணிகளினால் 113,585,983 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.