வல்வை விளையாட்டுக்கழக தொடர் சம்பியன்கள் ஆகியது உடுப்பிட்டி நவஜீவன்ஸ்

0
550 views

வல்வை விளையாட்டுக்கழக தொடர் சம்பியன்கள் ஆகியது உடுப்பிட்டி நவஜீவன்ஸ்..


வல்வை விளையாட்டுக்கழகம் வடமராட்சி மற்றும் பருத்தித்துறை லீக்குற்பட்ட கழகங்களுக்கிடையில் நாடத்திய ஏழு நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியும் அதன் பருசளிப்பு வைபவமும் இன்று (10-06-2017) மாலை 3.30 மணியளவில் வல்வெட்டித்துறை றெயின்போ மைதானத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தின் தலைவர் திரு. தலைமையில் நடைபெற்றது.


இதில் பிரதம விருந்தினர்களா திரு.ச.க.தேவசிகாமணி திரு.மு.தங்கவேல் திரு.சி.பாஸ்கரன் ஆகியோரும்  சிறப்பு விருந்தினர்களாக திரு. கப்டன்.S.சிவநேசன்தி ரு. S.பூரணச்சந்திரன்  திரு. A.அமிர்தலிங்கம் திரு. S.தனபாலசிங்கம்  திரு. K.பாலசிங்கம்    திரு. T.பிறேமதாஸ் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக திரு. V.கஜேந்திரன்  திரு. T.முரளிதரன்  திரு. A.அருளானந்தசோதி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

விருந்தினர் கௌரவிப்பினை தொடர்ந்து இடம்பெற்ற மூன்றாம் இடத்திற்கான போட்டியில் நவின்டில் கலைமதி அணியினை வீழ்த்தி கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியிருந்தது.


பின்னர் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் வதிரி பொமேஸ் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி மோதியது. ஆட்ட நேர முடிவில் 1:1 என்ற கோல்கணக்கில் போட்டி சமநிலையாகஇ பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க இடம்பெற்ற பனால்ட்டி முறையில் 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2017ம் ஆண்டின் சம்பியன்களாக முடிசூடிக்கொண்டது நவஜீவன்ஸ் அணி.
பின்னர் இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில்இ முதலில் வல்வை விளையாட்டுக்களகத்தின் முன்னால்இ மற்றும் இன்னால் வீரர்கள் கௌரவிப்பு நடைபெற்றது. 


 விழா.


இறுதியாக இடம்பெற்ற இறுதிப்போட்டியின் பரிசளிப்பு வைபவத்தில்இ நான்காம் இடம் பிடித்த நவின்டில் கலைமதி அணியினருக்குஇ திரு ளு.சர்மிலன் அவர்களால் அன்பளிப்புச்செய்யப்பட்ட கிண்ணம் வழங்கப்பட்டது.


 மூன்றாம் இடம் பிடித்த கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணியினருக்குஇ அமரர். மகாலிங்கம் பரமேஸ்வரி ஞாபகார்த்தமாக திரு மா.சத்தியலிங்கம் அவர்கள் அன்பளிப்பு செய்த 10இ000 ரூபா பணப்பரிசு மற்றும்இ அம்மான் செல்லத்துறை மற்றும் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக திரு வு.முரளிதரன் அவர்களால் அன்பளிப்புச்செய்யப்பட்ட வெற்றிக்கிண்ணம் ஆகியன வழங்கப்பட்டது .

 

இரண்டாமிடத்தினை பிடித்த வதிரி பொமேஸ் அணியினர்க்குஇ திரு கா.ஞானவேல் அவர்களால் அன்பளிப்புச்செய்யப்பட்ட 15இ000 ரூபா பணப்பரிசு மற்றும்இ வேலுப்பிள்ளை நிதியம் சார்பாக திரு வே.கஜேந்திரன் அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட வெற்றிக்கிண்ணம்இ மற்றும் அணி வீரர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது.


இறுதியாக 2017ம் ஆண்டிற்கான வல்வை விளையாட்டுக்கழகத்தினரால் நடாத்தப்பட்ட சுற்றுப்போட்டியின் சம்பியன்களாக முடிசூடிக்கொண்ட உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியினர்க்குஇ அமரர் வி.குணநாதன் அவர்கள் ஞாபகார்த்தமாக திரு பா.வசந் அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 25இ000 ரூபா பணப்பரிசு மற்றும்இ வெற்றிக்கிண்ணமும் மற்றும் அணி வீரர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here