பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிக்கும் எளிய வழிகள்

0
276 views

தற்போதைய காலத்தில் அரிசி, பருப்பு, காய்கற, பழங்கள் போன்ற உணவு பொருட்களில் கலக்கும் கலப்படமும், உடல் நலக்குறைவு பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது.
மேலும் பிளாஸ்டிக் மூலம் முட்டை,  அரிசி,  சர்க்கரை,  முட்டைகோஸ் ஆகியவை தயாரிக்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் ஒரு பீதி நிலவுகிறது.

பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி?
• ஒரு டம்ளர் தண்ணீரில் அரிசியை போட்டு பார்க்கும் போது, அது போட்டவுடன் மிதந்தால் பிளாஸ்டிக் அரிசி இல்லை என்று அர்த்தமாகும்.
• தீப்பெட்டி கொண்டு அரிசியை கொளுத்திப் பார்க்கும் போது,  பிளாஸ்டிக் வாடை வந்தால்   பிளாஸ்டிக் அரிசியாகும்.
• வடித்த சாதத்தை 3 அல்லது 4 நாட்கள் வைத்திருந்து பார்க்கும் போது  அதில் பூஞ்சை வராமல் இருந்தால்  அது பிளாஸ்டிக் அரிசியாகும்.
• ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி  காயவைத்து அதில் சிறிது அரிசியை போட வேண்டும். அப்போது அந்த அரிசி பொரிந்தால்  அது நல்ல அரிசி என்று அர்த்தம்.
• அரிசியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் போது  அதில் வெண்படலம் போல் மேலே ஒட்டிக் கொண்டு பிளாஸ்டிக் வாடை வந்தால்  அது பிளாஸ்டிக் அரிசியாகும்.
• கிரைண்டரில் மாவு அரைக்கும் போது  மாவு வெள்ளையாக வந்தால்  அது நல்ல அரிசி. அதுவே மஞ்சள் நிறத்தில் வந்தால்  அது பிளாஸ்டிக் அரிசியாகும்.

பிளாஸ்டிக் உணவுப்பொருளை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து?
• பிளாஸ்டிக் கலந்த உணவு பொருட்களை சாப்பிட்டால்  அது செரிமானக் கோளாறு  புற்றுநோய்,  சிறுநீரக கோளாறு போன்ற நோய்களை ஏற்படுத்தி,  உயிருக்கே ஆபத்தாக்கிவிடும்.
• மண்ணில் மக்காத தன்மைக் கொண்ட பிளாஸ்டிக் கலந்த உணவை சாப்பிடுவதால்,  அது உடலில் உள்ள ஜீரண உறுப்புகளை பாதித்து,  வயிற்று வலி மற்றும் செரிமான கோளாறு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
• பிளாஸ்டிக் கலந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்படும். மேலும் புற்றுநோய்,  சிறுநீரகக் கோளாறு,  மாரடைப்பு,  ரத்தக்குழாய் வெடிப்பு போன்ற ஆபத்தான நோய்களையும் ஏற்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here