இத்தாலியின் டியூரின் நகரில், சனிக்கிழமை இரவு நிகழ்ந்த ஒரு பட்டாசு வெடிப்பால் உருவான கூட்ட நெரிசலில் சுமார் 1500 பேர் காயமடைந்துள்ளனர்.
ரியல் மாட்ரிட் எதிராக ஜுவண்டிஸ் கால்பந்து அணி விளையாடிய சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தை கார்டிஃபில் நேரலையில் ஆயிரக்கணக்கானோர் பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது பெரிய வெடிசத்தம் கேட்டதும், குண்டுவெடித்து விட்டதாக வதந்தி பரவியது. ஒரு சிறுவன் உள்பட குறைந்தது 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தலை மற்றும் நெஞ்சில் காயங்களுடன் 7 வது சிறுவன் உள்பட 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.