அமெரிக்காவின் நாசா நிறுவத்தினால் நடத்தப்படும் போட்டி நிகழ்வொன்றுக்கு இலங்கை மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கை மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.
விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் பூமி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் போட்டி இடம்பெற்று வருகின்றது.
இந்த போட்டியில் 69 நாடுகளைச் சேர்ந்த 25140 மாணவர்கள் போட்டியிட்டனர்.
இந்த போட்டியின் இறுதிச் சுற்றுக்கு மொரட்டுவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆறு மாணவர்கள் கொண்ட குழுவினர் தெரிவாகியுள்ளனர்.
விந்துல ஜயவர்தன, தரிந்து குமார, காஞ்சன ருவன்பத்திரண, நதுன் டி சில்வா, ஜனக சத்துரங்க, சமோத வீரசங்க ஆகிய 6 மாணவர்களே இவ்வாறு தங்கள் திறமையை வெளிப்படுத்தி இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளனர்.
இதன்மூலம் நாசாவின் சர்வதேச போட்டி ஒன்றில் இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ள முதல் இலங்கை அணியாகவும் தெற்காசியாவின் மூன்றாவது அணியாகவும் இந்த அணி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.