பூப்பந்தாட்டத்தில் வடமாகாணசம்பியன் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை

0
412 views

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பூப்பந்தாட்டத்தில் 17 வயது பெண்களுக்கான ஆட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை இவ்வருட மாகாணச் சம்பியனாகியது.
குறித்த போட்டியின் இறுதியாட்டம் நேற்று மன்னார் பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றது
3 தனிநபர் ஆட்டங்களையும் 2 இரட்டையர் ஆட்டங்களையும் கொண்ட இச்சுற்றுப்போட்டியின் இறுதியாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலையும் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப்பாடசாலையும் மோதின. இதில் முதல் மூன்று தனிநபர் ஆட்டங்களையும் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலையைச்சேர்ந்த பிரசாந்தி ; ராகவி மறாறுமா நதுசிகா ஆகியோர் பண்டதாதரிப்பு பெண்கள் உயர்தரப்பாடசாலையைச் சேர்ந்த சரண்யா; சியானுஜா மற்றும்தமிழ்ப்பிரியா ஆகியோரை முறையே 2:0 2:0 2:1 என்ற செற்கணக்கில் வெற்றிகொண்டு 3:0 என்ற அடிப்படையில் மாகாணத்தின் இவ்வருடச் சம்பியனாகியது.
இப்பிரிவில் மூன்றாமிடத்துக்கான ஆட்டத்தில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி சுன்னாகம் மயிலணி வித்தியாலத்தை 3:0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று மூன்றாமிடத்தை தமதாக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here