வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகத்திற்கென புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு மைதானம் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
விளையாட்டுக்கழகத்தலைவர் செ.ஆனந்தராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வல்வை விளையாட்டுக்கழக மூத்த உறுப்பினர் மு.தங்கவேல் விளையாட்டுக்கழகத்தின் பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் பருத்தித்துறை கால்ப்பந்தாட்டச் சங்கத்தின் செயலர் அ.அருளானந்தசோதி வல்வை விளையாட்டுக்கழகத்தலைவர் மு.பிறேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத்திறப்புவிழாவை அடுத்து வல்வை பிரதேச அணிகளுக்கிடையிலான கால்ப்பந்தாட்டப்போட்டியும் இடம்பெற்றன