ஆழ்க்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தாடாகம்
நீச்சல் வீரன் ஆழ்க்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக அமைக்கப்படும் நீச்சல் தாடாகத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று 10மணியளவில் வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறிஜயசேகர, பிரதி அமைச்சர் எஸ்.எம்.எஸ் ஹரீஸ், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஆளுநர் றெஜினோல்ட் கூரே, வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஆழிக்குமரன் ஆனந்தனின் மனைவி, இரு மகன்கள் ஆகியோர் கலந்து அடிக்கல் நாட்டும் வைபவத்தை சிறப்பித்தனர்.