யாழ் மாவட்டத்தின் சிறந்த தடகள வீரராக நல்லூர் பிரதேச செயலகத்தைச்சேர்ந்த ஆர்.சதீஸன் தெரிவு செய்யப்பட்டார்.யாழ் மாவட்ட செயலக விளையாட்டுப்பிரிவினால் நடத்தப்பட்ட வருடாந்த விளையாட்டு விழாவின் போது நீளம் பாய்தல் நிகழ்வில் 6.58 மீற்றர் தூர பாய்ந்து 833 புள்ளிகளைப் பெற்று சிறந்த வீரராகத் தெரிவு செய்யப்பட்டார்.
சிறந்த ஓட்ட (தடம்)வீரராக 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்ற(59.7 செக்கன்களில் ஓடி 699 புள்ளிகளைப் பெற்றார்.
நல்லூர் பிரதேச செயலகத்தைச்சேர்ந்த ரி.செந்தூர்ஜனும் சிறந்த ஓட்ட வீராங்கனையாக 100 சட்டவேலி ஓட்டத்தை 17.5 செக்கன்களில் ஓடி நிறைவு செய்து 621 புள்ளிகளைப்பெற்ற தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச்சேர்ந்த ஜே.அனித்தாவும் சிறந்த கள வீரராக நீளம்பாய்தலில் 6 58 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கம் வென்ற நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.சதீஸனும் சிறந்த கள வீராங்கனையாக நீளம்பாய்தலில் 4 97மீற்றர் தூரம் பாய்ந்து தங்கம் வென்ற கரவெட்டி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த எஸ்.ஆரணியும் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் இடம்பெற்ற இறுதி நாள் நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டன.