அணியில் பத்துபேருடன் விளையாடி எதிரணிக்கு கடும் அழுத்தங்கொடுத்து ஆட்டத்தைச் சமன் செய்தபோதும் சமனிலை தவிர்ப்பு உதையின் மூலம் நினைவேந்தல் கிண்ணத்தை தவறவிட்டது ஊரெழு ரோயல் விளையாட்டுக்கழகம்.
கிளிநொச்சி கால்ப்பந்தாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கினிச் சிறகுகள் அமைப்பின் அனுசரணையுடன்வடக்கு கிழக்கு மாகாண அணிகளுக்கிடையிலான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வெற்றிக்கிண்ணத்துக்கான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டங்கள் நேற்று முன்தினம் கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றன. இவ்விறுதியாட்டத்தில் ஊரெழு றோயல் விளையாட்டுகாகழகமும் மன்னார் பள்ளிமுனை சென்லூசியஸ் விளையாட்டுக்கழகமும் மோதின.
பலம் பொருந்திய பல அணிகளை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு முன்னேறியிருந்ததால் பார்வை யாளர் மத்தியில் இயு அணி மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது.அந்த எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்றவகையில் இரு அணியினரும் அபாரமாக ஆடினர்.இந்நிநிலையில் ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் சென்லூசியஸ் அணியின் ராபாட் அற்புதமான கோலைப்போட ஆட்டமும் சூடுபிடிக்க மறுகணம் விதிகளை மீறியதற்காக றோயல் அணி பின்கள வீரர் ஒருவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்ற றோயலுக்கு சற்று பின்னடைவு ஏற்ப்பட்டது.இருந்த போதும் பத்துப்பேருடன் விளையாடினாலும் எதிரணிமின் ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து ஆடியபோதும் கோல்களைப்பதிவு செய்து கொள்ள முடியவில்லை இதனால் 1:0 என ஆட்டம் இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது.
இடைவேளையின் பின் ஆட்டத்தில் அனல் பறந்தது இரு அணியினரும் எதிரணிகளின் கோல் பகுதிகளை ஆக்கிரமிப்பதும் மீள்வதுமாக இருந்து பார்வையாளர்களுக்கு ஏமாற்றமளித்துக்கொண்டிருந்தனர்.இந்நிலையிலையில் ஆட்டம் நிறைவடைய 8 நிமிடங்கள் இருக்கும் போது றோயலின் நட்சத்திர வீரர் கோபன் கடத்திய பந்தை தலையால் அடித்து கோலாக்கி ஆட்டத்தை சமப்படுத்தினார் கபில்.தொடர்ந்த ஆட்டத்தில் மேலதிக கோல் போடப்படாத நிலையில் ஆட்டம் சமனிலையில் முடிவடைந்தது.
இதனையடுத்து வெற்றியாளர்களை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு உதையில் 4:3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று நினைவேந்தல் கிண்ணசத்தையும் 2 இலட்சம் ரூபா பணப்பரீசையும் பெற்றுக்கொண்டது பள்ளிமுனை சென்லூசியா விளையாட்டுக்கழகம்..
இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் ஆட்டநாயகனாகவும் பள்ளி முனை சென்லூசியாவைச்சேர்ந்த ராபாட் தெரிவு செய்யப்பட்டார்.
மூன்றாமிடத்தை கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது.